

எடை: 370 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 320 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 278 SKU: 978-81-924657-4-6 ஆசிரியர்:சோம.வள்ளியப்பன்
தலைமை தாங்க நீங்கள் தயார் என்றால் வழி காட்ட இந்த புத்தகம் தயார்.
ஆளப் பிறந்தவர் நீங்கள்!
செறிவும் விரிவும் செய்யப் பட்ட பதிப்பு
ஆசிரியர் சோம. வள்ளியப்பன்
தலைவர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாகிறார்களா ?
அவர்களை உருவாக்குவது யார்?
எல்லோராலும் தலைவராக ஆக முடியுமா?
தலைவர் ஆவதற்குத் தேவையான பண்புகள் என்ன?
அவர்களது எப்படிப்பட்ட செயல்பாடுகள் வெற்றிகளைக் கொடுக்கின்றன?
ஒரு தலைமை எதனால் தோற்கிறது?
வெற்றி பெற, தலைவனின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்?
தலைவர்கள் யாரைக் கலந்து செயல்படுகிறார்கள்?
அவர்களின் சீடர்கள் யார்?
அரசியலில் இருப்பவர்கள், நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், கல்லூரி மாணவர்கள், தொழில், வியாபாரம் செய்பவர்கள் என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, லீடெர்ஷிப் என்று அழைக்கப் படும் அதிமுக்கியமான விஷயம் பற்றிய அத்தனை விபரங்களையும் ஒன்று விடாமல் அள்ளித் தருகிறது இந்தப் புத்தகம்.
யூகங்களின் அடிப்படையில் இல்லாமல், உலக அளவில் லீடர்ஷிப் பற்றி நடந்துள்ள ஆராய்ச்சிகளையும், வெற்றி பெற்ற தலைவர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் புனை கதையைப் போன்று சுவராஸ்யமான நடையில் எடுத்துச் சொல்கிறார் சோம. வள்ளியப்பன்.
'அள்ள அள்ள பணம்' "காலம் உங்கள் காலடியில்', 'இட்லியாக இருங்கள்', 'உஷார் உள்ளே பார்', 'சிறந்த நிர்வாகி ஆவது எப்படி?', 'மோட்டிவேஷன் - தள்ளு' 'உலகம் உன் வேசம் போன்ற சூப்பர் ஹிட் வெற்றி நூல்களின் ஆசிரியரான சோம. வள்ளியப்பனின் லீடர்ஷிப் பற்றிய இந்தப் புத்தகம் சந்தேகம் இல்லாமல் உங்களை ஒரு தலைவனாக்கப் போகிறது. மாபெரும் சபைகளில் நீங்கள் நடக்கும் போதெல்லாம் மாலைகள் விழுவதற்கு வலி செய்யப் போகிறது