ஆபரேஷன் வீனஸ் Operation Venus(Tamil Books)

ஆபரேஷன் வீனஸ் Operation Venus(Tamil Books)

Regular price Rs. 140.00
Unit price  per 
Tax included. Shipping calculated at checkout.

ஆபரேஷன் வீனஸ் Operation Venus(Tamil Books)

தமிழ் புத்தகம்

எடை: 225 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்:184
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ.140
SKU:978-93-82578-84-0
ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய 'தொட்டால் தொடரும்' 'கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்ளால் விரும்பிப் படிக்கப்படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதைச் சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையை தொடர்ந்து பதித்து வரும் பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று ஆபரேஷன் வீனஸ் இந்தியா வல்லரசு நாடாக இன்றுவரை இல்லாமல் இருக்கலாம். அனால் ஜனநாயகத்தின் பூரணத்தை உணர்ந்துகொள்ள அயல்நாட்டவர்கள் வந்தவண்ணம் உள்ளனர். அப்படிப்பட்ட ஜனநாயகத்தின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்பவர்கள் பத்திரிகையாளர்கள்\ ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள். மூன்றாம் உலக நாடுகளில் ஜனநாயகம் தழைத்திட லட்சியத்திற்கும் லட்சங்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில், தன் நேச உறவுகளையும், நெஞ்சின் உரத்தையும் சதா உரசிக்கொண்டே இருக்கும் துஷ்ட சக்திகளை மீறி தன் இலட்சியத்தில் எந்த சமரசமும் இல்லாமல் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை ஆகாஷ் என்கிற தேசப்பற்று ததும்பும் நவநாகரிக ஆங்ரி யங் மேனைப் பார்த்து புரிந்துகொள்ளக் கடவீர்கலாக!