எடை: 340 கிராம்
நீளம்: 215 மி.மீ.
அகலம்: 140 மி.மீ.
பக்கங்கள்: 296
அட்டை: சாதா அட்டை
விலை:ரூ. 222
SKU: 978-93-82577-71-3
ஆசிரியர்: டாக்டர். ம. லெனின்
அற்புதங்கள் எங்கும் விளைகின்றன. ஆனால் நாம்தான் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். நமக்கு அருகிலேயே இருக்கக் கூடியவற்றின் அருமை பல நேரங்களில் நமக்குத் தெரியாமல் போய்விடுகிறது. எங்கோ தொலைவில் இருப்பதையோ, இல்லாததையோ தேடிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் அலைகிறோம். நாம் அன்றாடம், பார்க்கும் பழகும் ஒவ்வொரு விசயத்திலும் ஓராயிரம் கருத்துகள் ஒளிந்து கொண்டு இருக்கின்றன. அவற்றை நாம் கூர்ந்து கவனித்தாலே எவ்வளவோ சாதிக்க முடியும். அப்படிக் கூர்ந்து கவனித்துப் பயன் பெறுவது எப்படி என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. இதைப் படித்து முடிப்பவர்கள், எளிதில் பலன் பெறலாம். படிப்பதற்கு முன்பு இருந்ததை விடப் பெரிதும் அறிவு வளர்ச்சி பெற்றவர்களாக அவர்கள் ஆவார்கள் என்பது திண்ணம். அவர்களால் மேலும் பல அறிஞர்கள் உருவாக்கப்படுவார்கள். அந்தப் பணிக்கான அரிய முயற்சி இது. நீங்கள் எவ்வளவோ காலமாகத் தேடிக் கொண்டிருந்த ஏதோ ஒன்றுஇதைப் படிக்கும் சமயத்தில் சட்டென்று உங்களுக்குப் பிடிபடலாம். அது உங்கள் வாழ்நாள் முழுமைக்கும் பயன்படலாம். ஒன்றென்ன.. ஓராயிரம் தேறும் என்பதைப் படித்து முடித்ததும் உணர்வீர்கள். ஏனெனில் நீங்கள் மூளை உள்ளவர். இனி, மிகச் சிறந்த வகையில் வளர்க்கப்பட்ட மூளை உடையவர் ஆகிவிடுவீர்கள்.