மன்மதன் வந்தானடி. Manmadhan Vanthanadi (Tamil Books)

  மன்மதன் வந்தானடி. Manmadhan Vanthanadi (Tamil Books)

  Regular price Rs. 130.00
  Unit price  per 
  Tax included. Shipping calculated at checkout.

  மன்மதன் வந்தானடி. தமிழ் புத்தகம்

  எடை: 215 கிராம்
  நீளம்: 215 மி.மீ.
  அகலம்: 140 மி.மீ.
  பக்கங்கள்:176
  அட்டை: சாதா அட்டை
  விலை:ரூ.130
  SKU:978-93-82578-82-6
  ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர் 
  .மன்மதன் வந்தானடி ======================== பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய “தொட்டால் தொடரும்”, “கனவுகள் இலவசம்" ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை. அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்றவர். நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்து வருபவர் பி.கே.பியின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று மன்மதன் வந்தானடி. வெற்றிக்கதைகள் படித்த வைதேகி வெட்டிக் கதை பேசியே பொழுதைப் போக்கும் ராமச்சந்திரனை மணமுடிக்க நேரிடுகிறது. தான் கனவு கண்ட வாழ்க்கைக்கும் எதார்த்தத்துக்கும் இருக்கும் இடைவெளி என்ன என்பதை திருமணமான ஒரு வாரத்திலேயே புரிந்துகொள்கிறாள் வைதேகி. தன் ரசனைக்கும் தகுதிக்கும் சற்றும் பொருத்தமில்லாத ராமச்சந்திரனை இனியும் சகித்துக்கொள்ள முடியாது என்று எண்ணி புயலெனப் பிறந்த வீட்டுக்குப் புறப்படுகிறாள். அங்கே அவளுக்குக் காத்திருந்தது மரண அடி. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படி சொந்த ரத்த உறவுகளையே கல்நெஞ்சக்காரர்களாக மாற்றுகிறது, பெற்றவர்களை சூழ்நிலைக்கைதிகளாக முடக்கிவிடுகிறது என்பதை உணர்கிறாள். அப்போது அவள் ஒரு முடிவு எடுக்கிறாள். அதுதான் கதையின் மையப்புள்ளி. தாம்பத்யத்தில் உண்மையான வெற்றி என்பதற்கான அளவுகோல் என்ன என்பதுதான் வைதேகி நவயுகப் பெண்களுக்கு உதிர்க்கும் பொன்னான செய்தி