

வெற்றிக்கோட்டை எட்டிப்பிடித்த 24 மனிதர்களின் வியூகங்களை அறிமுகம் செய்யும் இந்தப் புத்தகம் ஒரு வகையில் மந்திர ஜன்னல் போல. திறந்து பாருங்கள் வெற்றிக்கான விரைவுப்
பாதையை தரிசிக்கலாம் .
வெற்றியாளர்களின் கதையை வாசிப்பது எப்போதுமே சுகானுபவம்தான். அதிலும் அவர்கள் அடைந்த வெற்றிகளுக்குப் பின்னால் இருக்கும் வியூகம், உத்தி, ஒத்துழைப்பு, சாகசத்தை தெரிந்துகொள்வது கூடுதல் மகிழ்ச்சி.
சாதித்த மனிதர்களைப் பற்றி எழுதப்பட்ட 24 புத்தகங்களை அறிமுகம் செய்யும் இந்த புத்தகத்தில் வலம் வரும் ஒவ்வொருவரும் தனித்தனி வகைமாதிரிகள் ஆளுக்கு ஒரு ஆளுக்கு ஒரு பின்புலம் ஆனால் எல்லோருக்கும் இலக்கு ஒன்றுதான்
சக்சஸ், வெற்றி அதை அவர்கள் சாதித்தவிதத்தை சுவராசியம் ததும்பும் நடையில் விவரிக்கும் புத்தகம் இது.
வெற்றியாளர்கள் பட்ட சிரமங்களையும் கஷ்டங்களையும் பேசுவதில்லை இந்த புத்தகத்தின் நோக்கம். மாறாக அவர்கள் வகுத்த வியூகங்களை உத்திகளை பேசுகிறது. அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த கதையை காட்சிப்படுத்துவதே புத்தகத்தின் நோக்கம்.
நூலாசிரியர் சித்தார்த்தன் சுந்தரம் வெற்றி பெற்ற மனிதர்கள் பலருடைய கதைகளை நுணுக்கமாக வாசித்தவர். நுட்பமாக ஆய்வு செய்தவர். அந்த வகையில் இந்த இந்த புத்தகத்தில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு புத்தகமும் அணில் கடித்த பழமாக இனிக்கும். படித்து பாருங்கள். ஆம் என்று சொல்வீர்கள்.
நாணயம் விகடன் இதழில் நூலாசிரியர் சித்தார்த்தன் சுந்தரம் எழுதிய புத்தக மதிப்புரைகளின் தொகுப்பே இந்த புத்தகம்.
வெற்றி என்ற பழத்தை பெறுவதற்கு முருகன் வழியிலும் பயணிக்கலாம். பிள்ளயார் வழியையும் பின்பற்றலாம். இரண்டுமே நேர்மையான வழிகள் தான். இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். பிள்ளையார் வழியில் உங்களுக்கான வெற்றிப் பாதையை அடையலாம்!