அதே வினாடி (தமிழ் புத்தகம்)
ஆங்கிலத்திலும் மற்ற உலக மொழிகளிலும் சுயமுனேற்றத்திக்கான நூல்கள் அனேகம் உள்ளன. ஆனால் மேற்கத்திய உலகிற்கும் இல்லாத ஒரு சிறப்பு நம் நாட்டுக்கு உள்ளது. அதுதான் பிரச்சனைகளுக்கான ஆன்மீகத் தீர்வு. தமிழில் ஒரு நூலின் மூலம் மேற்கத்திய உலகின் உண்மைகளும், கண்டிப்புகளும் இந்திய பாரம்பரியமும் சங்கமிக்க முடியும் என்றால் அது இந்த நூலில்தான். ஆமாம் நாகூர் ரூமியின் அசத்தலான எளிய நடையில் நகைச்சுவையோடு எல்லா உண்மைகளையும் எடுத்துரைக்கும் இந்த நூல் உங்களுக்கு ஒரு பொக்கிஷமாக இருக்கும்.இந்த நூலை படித்து முடித்த அதே வினாடி உங்கள் வாழ்க்கை நல்லவழியில் திசைமாறும் படித்து மாறுங்கள்.